மேலே படத்தில் காணும் நீர் கிடங்கு திஹாரிய கண்டி வீதி பூட் சிடியிற்கு அருகாமையில் ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாசலுக்கு செல்லும் பாதையிற்கு மிக அண்மையில் அமைந்துள்ளது . மழை காலத்தில் நிரம்பி வழியும் இந்த நீர்கிடங்கு வற்றுவதற்கு நீண்ட காலம் எடுத்துகொள்ளவது வழமை.
மழை காலங்களில் நிரம்பி வழியும் இந்நீர் கிடங்கில் தொடந்து குப்பை கூளங்கள் போடப்படுவதனால், தற்பொழுது இங்கு டெங்கு நுளம்பு பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்த நீர் கிடங்கு அழுக்கடைந்துள்ளதால் அப்பிரதேசத்தில் துர்நாற்றம் வீசி கற்று மாசுபடுத்தப்படுகின்றது. இதனால் இப்பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இப்பிரதேசத்தில் நோய்கள் பரவாது, தூய்மையான அழகிய பிரதேசமாக வைப்பதற்கு ஊர்மக்களும், பிரதேச சபை உறுப்பினர்களும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நம்புகின்றோம்.
Tags
திஹாரிய செய்திகள்