எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் இன்று இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களான துருக்கி பிரதமர் அர்துகான் , எகிப்து ஜனாதிபதி முர்ஷி , கட்டார் நாட்டின் அமீர் ஆகியோருடன் ஹமாஸ் அரசியல் பிரிவின் தலைவர் காலித் மிஷால் காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்பாக முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றை நடாத்தவுள்ளனர். என்று பலஸ்தீன தகவல்கள் குறிப்பிட்டுகின்றன.
சற்று முன்னர் துருக்கி பிரதமர் அர்துகான், ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் காலித் மிஷால் ஆகியோர் எகிப்தின் தலைநகர் கெய்ரோ சென்றுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. துருக்கி பிரதமர் அர்துகானின் கெய்ரோ விஜயம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. என்று அந்த செய்தி குறிப்பிடுகிறது .
ஆலோசனைக் கூட்டத்தின் பின்னர் இன்று எகிப்து ஜனாதிபதி முர்ஷி, துருக்கி பிரதமர் அர்துகான் ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றையும் விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நாடுகளும் அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகளுடனும் காஸா நிலவரம் தொடர்பாக பேச்சில் ஈடுபட்டுள்ளன .
Tags
உலகச் செய்திகள்
