"நாட்டில் ஏற்பட்டுள்ள கலகமும் கொந்தளிப்பும் விரைவில் தெளிவடையும்" : முர்ஸி


அதிகாரத்தை உயர்த்தும் விவகாரத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள கலகமும் கொந்தளிப்பும் விரைவில் தெளிவடையும் என்றும் மக்கள் இதைச் சிறப்பாகக் கடந்து வருவார்கள் என்றும்  எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி தெரிவித்துள்ளார்.

அதிபரின் அதிகாரத்தினைக் கூட்டும் மசோதாவை முர்ஸி அறிவித்தது முதல் எகிப்தில் கடும் எதிர்ப்புடன் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முன்னாள் சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான கலகப் போரை இவை நினைவுறுத்தும் வகையில் அமைந்தன என்று செய்திகள் தெரிவித்தன.

அதிபர் முர்ஸி மிகவும் நம்பிக்கையுடன் உள்ளதாகவும், எகிப்தியர்கள் இதையும் வெற்றிகரமாகக் கடந்து வருவார்கள் என்று கருதுவதாகவும் அதிபரின் செய்தித் தொடர்பாளர் யாஸர் அலீ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அதிபரின் கூடுதல் அதிகார முடிவை எதிர்த்துள்ள எகிப்தின் உச்சநீதி மன்றம் இப்பிரச்னை சுமூகமாகத் தீர்க்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது பற்றி கருத்தளித்த அதிபரின் செய்தித் தொடர்பாளர் "விரைவில் மேல்நிலை நீதி மன்றத்தில் அதிபர் விளக்கம் அளிப்பார்" என்று தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post