போயா தின சட்டம் உழ்ஹிய்யாவை எந்த வகையிலும் தடைசெய்யாது.


“போயா தினங்களில் பிராணியின் மாமிசங்கள் விற்கும் நோக்கத்தில் அல்லது விற்பதற்காக விலை பேசும் நோக்கத்தில் எந்த ஒரு பிராணியையும் அறுக்கக் கூடாது” என்ற சட்டமே நாட்டில் உள்ளது தவிர் போயா திங்களில் விற்பனை நோக்கம் அற்ற உழ்ஹிய்யா குர்பானை  போயா தின சட்டம் எந்த வகையிலும் தடைசெய்யாது என்று சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.

“போயா தினங்களில் பிராணியின் மாமிசங்கள் விற்கும் நோக்கத்தில் அல்லது விற்பதற்காக விலை பேசும் நோக்கத்தில் எந்த ஒரு பிராணியையும் அறுக்கக் கூடாது” என்பதாகும். அப்படி ஒருவர் சமூகத்தின் பொது நலனுக்காக ஒரு பிராணியை அறுத்து விற்பதற்கு தேவை இருந்தால் அல்லது விற்பதற்கு விலை பேசுவதற்கு தேவை இருந்தால் மத கலாசார அமைச்சின் எழுத்திலான அங்கீகாரம் பெற்று பிராணிகளை அறுப்பற்கு இயலும் என்பதையும் இந்தச் சட்டம் விதிவிலக்களிக்கிறது.

நாம் உழ்ஹிய்யா குர்பான் கொடுப்பது மாமிசங்களை விற்று பிழைப்பு நடாத்துவதற்காக அல்ல. அது நமது மார்க்கக் கடமை. அந்த மாமிசங்களில் அல்லாஹ்விற்கும் எந்தத்தேவையும் கிடையாது. அந்த மாமிசங்களை நாம் ஏழைகளுக்கே விநியோகிக்கிறோம். எனவே, இலங்கை சட்டத்திற்கு நாம் எதிராக செயல்பட வில்லை என்று தெளிவுபடுத்த முஸ்லிம்கள் கடமைபட்டிருக்கறார்கள்.

இவ்வாறு தெளிவு படுத்தாமல் நமது மார்க்கக் கடமைகளை நாங்கள் விட்டுக் கொடுப்போமேயானால் நாம் முஸ்லிம்கள் என்று சொல்வதற்கோ, இப்ராஹீம் நபியின் மார்க்கத்தை பின்பற்றுகிறோம் என்று சொல்வதற்கோ அருகதையற்றவர்கள் என்பதே உண்மையாகும். என்று சுட்டிக் காட்டப் பட்டுள்ளது .

அய்யாமுத்தஷ்ரீக்குடைய இரண்டாம் நாளான ஒக்டோபர் 29 ஆம் திகதி திங்கட்கிழமை போயா தினமாக இருப்பதனால்அன்றைய தினம் உழ்ஹிய்யா கடமைகளை முற்றாக தவிர்த்து நாட்டு சட்டத்தை முற்றாக பேணி நடக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா  கோரி அறிக்கை வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.


1971 பாராளுமன்றச் சட்டம்:

போயா தினங்கள்  குறித்து 1971ம் ஆண்டின் 29ம் இலக்கம் கொண்ட இலங்கையின் பாராளுமன்றச் சட்டம் ஒன்று  போயா தினங்கள் குறித்து சட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

PART II
OBSERVANCE OF FULL MOON POYA DAYS
Closure of certain establishments on Full Moon Poya Days    13.
(1) No person shall on any Full Moon. Poya Day keep open for business-
(a) any night club, dance hall or any place of public performance; or
(b) any arrack tavern, toddy tavern, foreign liquor shop, liquor bar, or any other premises where any liquor is kept for sale; or
(c) any place where betting on horse-racing or gambling of any description whatsoever is carried on; or
(d) any meat stall.

(2) The provisions of sub-section (1) shall have effect notwithstanding any other law or any terms or conditions of any licence or permit issued under any written law.

Prohibition of slaughter of animals.    14. No person shall, on any Full Moon Poya Day. slaughter any animal for the purpose of sale, or sell or offer for sale, the flesh of any animal.

Permission of certain public performances.    15. Not withstanding the provisions of section 13 it shall be lawful for a person to present any public performance if he obtains the prior written approval of the Minister in charge of the subject of Cultural Affairs,

நன்றி: லங்கா முஸ்லிம்

Post a Comment

Previous Post Next Post