கம்பஹா மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை தலைவராக மௌலவி M.H.M. லாபிர் தெரிவு.


கம்பஹா மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை  தெரிவு செய்யும் கூட்டம் கடந்த ஒக்டோபர்  மாதம் 20 ஆம் திகதி கொழும்பு வாழைத்தோட்டம்  பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

இக் கூட்டத்தின் போது கம்பஹா மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை தலைவராக மௌலவி M.H.M. லாபிர் (கபூரி) அவர்கள் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். உப தலைவராக A.L.M. ரிழா (ஹசனி) மற்றும் A.M.M. ஜெஸ்மின் (தீனி) அவர்களும், செயலாளராக A.H.M. நுஸ்ரான் (பின்நூரி). உதவி செயலாளராக M.Z.M. ஸுஹைர் (நளீமி) அவர்களும், தனாதிகாரியாக Z.M. நுஹ்மான் (ஈமானி) அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன் ஹொரகொல்ல மற்றும் திஹாரிய பிராந்திய உலமா சபை தலைவராக மௌலவி ரிழா (ஹசனி) அவர்களும், உப தலைவராக மௌலவி அம்ஜத் (ரஸாதி) மற்றும் தௌசீர்  (நளீமி) ஆகியோரும், செயலாளராக மௌலவி நஸ்ரின் (நூரி), உதவி செயலாளராக இர்பான் (பஹ்ஜி) அவர்களும்,  தனாதிகாரியாக மௌலவி பாஸி (ஹசனி) அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.

Post a Comment

Previous Post Next Post