இடிந்து விழும் நிலையில் உள்ள அல் -அஸ்ஹர் பிரதான மண்டபம் தொடர்பாக திஹாரிய கல்வி அபிவிருத்தி சங்கம் (TEDS) இன்று மாலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக குமாரணதுங்கவை சந்தித்தது.
அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் குஜி ஹனீபா தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பு ஹொரகொல்ல பண்டாரநாயக வளாகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் பொழுது எமது பாடசாலையின் தற்போதைய நிலைமையை விளக்கிக்கூறிய திஹாரிய கல்வி அபிவிருத்தி சங்கம் இதற்கு தங்களால் முடியுமான உதவிகளை வழங்குமாறு கேட்டுகொண்டனர்.
தனது ஆட்சிக்காலத்தில் திஹாரிய அல் -அஸ்ஹர் மத்திய கல்லூரிக்காக செய்த வேலைகளை நினைவுகூர்ந்த முன்னாள் ஜனாதிபதி தற்பொழுது பாடசாலை இருக்கும் நிலையில், தன்னால் இயன்ற உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தார். அத்துடன் அல்-அஸ்ஹர் பாடசாலைக்கு நேரடியாக வருகைதந்து பார்ப்பதற்கும் ஆவலாக இருப்பதாக கூறினார்.
இந்த சந்திப்பின் இறுதில் அல் -அஸ்ஹர் மத்திய கல்லூரி அதிபரினால் முன்னாள் ஜனாதிபதிக்கு புனித அல் -குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
Tags
திஹாரிய செய்திகள்







