வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களினால் 33 பேர் படுகாயம் அடைந்துள்ளதோடு 14 பேர் காணாமற் போயுள்ளனர்.
மண்சரிவு, சுழல் காற்று மரம் முறிவு என்பவற்றால் 146 வீடுகள் முழுமையாகவும் 805 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மழை, வெள்ளம் காரணமாக நாடு முழுவதிலும் 45,916 குடும்பங்களைச் சேர்ந்த 1,75,558 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 3,394 குடும்பங்களைச் சேர்ந்த 9,696 பேர் 47 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
