இலங்கை சிறைச்சாலைகளில் 20 பாகிஸ்தான் கைதிகள் - ரவூப் ஹக்கீம்


இலங்கைச் சிறைச்சாலைகளில் உள்ள பாகிஸ்தான் கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை மற்றும் தண்டனைக் காலம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டவுள்ளதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

இலங்கை சிறைச்சாலைகளில் 20 பாகிஸ்தான் கைதிகள் தண்டனை பெற்று வருகின்றனர். 

இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை தொடர்பில் இரு நாடுகளும் ஒரு நிலைப்பாட்டிற்கு வருவது முக்கியம் என அமைச்சர் தெரிவித்தார். 

ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருத்தல் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பாகிஸ்தான் பிரஜைகள் இலங்கை சிறைகளில் தண்டனை பெற்று வருகின்றனர். 

ஒரு கிலோகிராமிற்கும் அதிகமான போதைப் பொருட்களை வைத்திருந்தவர்களுக்கே பாகிஸ்தானில் ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். 

எனினும் இலங்கையில் இரண்டு கிராம் போதைப் பொருள் வைத்திருந்தவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார். 

Post a Comment

Previous Post Next Post