2012 ஆம் ஆண்டில் 123 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


உலகளாவிய ரீதியில் நடப்பு ஆண்டில் மட்டும் 123 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக , ஊடக கண்காணிப்பு அமைப்பான சர்வதேச பத்திரிக்கை ஸ்தாபனம் (இன்டர்நேஷனல் பிரஸ் இன்ஸ்டிட்யூட் IPI ) தெரிவித்துள்ளது.

கடந்த 1997 ஆம் ஆண்டிலிருந்து 15 ஆண்டு காலப்பகுதிக்குள் இதுவே அதிகபட்ச எண்ணிக்கை என்பதை IPI சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2009-ல் 110 ஊடகவியலாளர்களும் , கடந்த ஆண்டு 102 ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டதே இதுவரை உச்சபட்சமாக இருப்பதாக் IPI வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிபிடப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டில் ஊடகவியலாளர்களை மிகுதியாக பலிகொண்ட நாடுகள் பட்டியலில் சிரியா முதலிடத்தில் உள்ளதாக குறிபிடப்பட்டுள்ளது.

இதே நேரம் உள்நாட்டுக் கலவரம் நீடித்து வரும் சிரியா நாட்டில் மட்டும் 36 செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக் அறியப்படுகின்றது. அதைத் தொடர்ந்து, சோமாலியாவில் 16 பேர் பலியாகி உள்ளனர். மெக்சிகோ, ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. ஆசிய கண்டத்தில் அதிகபட்சமாக பிலிப்பைன்ஸ் இல் 5 ஊடகவியலாளர்களும், பாகிஸ்தானில் 7 ஊடகவியலாளர்களும் இந்தியாவில் 2 ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டதாக அந்த ஆய்வில் குறிபிடப்பட்டுள்ளது.

தகவல்கள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக, ஊடகவியலாளர்கள் குறிவைத்து தாக்கப்படுவது அதிகரித்து வருவதாக சர்வதேச பத்திரிக்கை ஸ்தாபனம் தெரிவித்துள்ளது என அறியப்படுகின்றது.

மேலும், ஊடகவியலாளர்கள் பாதுகாப்பது ஒவ்வொரு நாட்டு அரசின் கடமை என்றும், அதில் இருந்து எந்த அரசும் தவறக் கூடாது என்றும் ஊடக கண்காணிப்பு அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post