திஹாரிய அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று (06-12-2012) காலை 10 மணியளவில் கண்டி வீதி லப்ஸன் திருமண மண்டபத்தில் பாடசாலை அதிபர் ஜனாப் தௌஸீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ்வருடத்தில் மாணவர்கள் கல்வி, விளையாட்டு, கலை, கலாச்சாரம் மற்றும் சிறந்த பாடசாலை வரவு போன்ற பல்வேறு துறைகளில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதல்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வின் போது ,மொத்தம் 470 சான்றிதல்களும் 170 பதக்கங்களும் வழங்கப்பட்டது. அத்துடன் பரிசளிப்பு விழா நினைவு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இன்றையா இன்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பேராதெனிய பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் M.S. அப்துல் பாரி அவர்களும் விசேட அதிதியாக கம்பஹா மினுவாங்கொட தமிழ் பிரிவு பிரதிக் கல்விப் பணிப்பாளர் M.S.அஷ்ரப் அவர்களும் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர்களான குஜி ஹனிபா மற்றும் M.S.M அஷ்ரப் ஆகியோர் மற்றும் பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், TEDS உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
Tags
திஹாரிய செய்திகள்























