திஹாரிய ஈமானியா அரபுக் கல்லூரியிற்கு 2013 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்த்தல்.


திஹாரிய ஈமானியா அரபுக் கல்லூரியிற்கு 2013 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்ப்பதற்கான  நேர்முகப் பரீட்சை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09-12-2012) காலை 9 முதல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. அத்துடன் புதிய மாணவர்களுக்கான பாடநெறிகள் ஜனவரி மாதம் ஆரம்பமாகவிருகின்றது.

நேர்முகப் பரீட்சைக்கு வருபவர்கள்  * பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், * 2012 பாடசாலை இறுதியாண்டு பரீட்சையின் பெறுபேறு மற்றும் வேறேதும் தகமைகள்  இருப்பின் அதற்கான சான்றிதல்களையும் எடுத்துவருமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளீர்கள்.

அல்-குர்ஆன் மனனம், ஷரீஆப் பிரிவு ஆகிய இரு பிரிவுகளுக்குமான மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட இருப்பதாக ஈமானியா அரபுக் கல்லூரியின் அதிபர் N.M. சைபுல்லாஹ் அவர்கள் தெரிவித்தார். மேலும் இக்கல்லூரியில் சேர்ந்து கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு கீழ்வரும் 

01. அல்-குர்ஆன் மனனம்.
02. க.பொ.த. சாதாரண தரம்.
03. அஹதிய்யாப் பரீட்சை.
04. தர்மாச்சாரய பரீட்சை.
05. அல் - ஆலிம் (முதவஸ்ஸிதா, ஸாநவிய்யா).
06.  ஷரீஆ உயர்தரம் (மௌலவி, ஆலிம்).
07. க.பொ.த. உயர்தரம் (கலை).
08. பல்கலைக்கழக நுழைவுக்கான சிறப்புத் தேர்ச்சி.
09. அரபு இஸ்லாமிய பல்கலைக்கழக நுழைவுக்கான வழிகாட்டல்.
10. தொழில்சார், கணணி, தொழிநுட்பம், சாரதி அனுமதிப் பயிற்சி.

ஆகிய தகமைகளை அடைந்துகொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நுழைவுக்கான பொதுத் தகமைகள்.
01. கல்வியைத் தொடர்வதற்கான உடல் ஆரோக்கியம் உடையவராக இருத்தல் வேண்டும்.
02. நற்குணம் உடையவராக இருத்தல் வேண்டும்.
03. அல்-குர்னை சரளமாக ஒதுபவராக இருத்தல் வேண்டும்.

மனனப் பிரிவுக்கு நுழைவதற்கான  தகமைகள்.
01. 9 வயதிற்கு மேட்படாதவர்களாக இருத்தல் வேண்டும்.
02.  ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஷரீஆப் பிரிவுக்கு நுழைவதற்கான  தகமைகள்.
01. 14 வயதிற்கு மேட்படாதவர்களாக இருத்தல் வேண்டும்.
02.  அல்-குர்னை மனனம் செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு:
அதிபர் : N.M. Saifullah (Ihsani)  - Tel : 0773 556822
உப அதிபர்  : M.M. Sadik (Ihsani)  - Tel : 077 1007699


Post a Comment

Previous Post Next Post