2013 ஜனவரி மாதம் முதல் முஸ்லிம் சேவையில் மீண்டும் முஸ்லிம் நாடகங்கள்.


இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் 12வருட கால இடைவெளியின் பின்னர் மீண்டும் முஸ்லிம் நாடகங்கள் ஒலிபரப்படவுள்ளன.

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன தலைவர் ஹட்சன் சமரசிங்கவின் பணிப்புரையின் பேரில் எதிர்வரும் 2013 ஜனவரி மாதம் முதல் முஸ்லிம் சேவையில் மீண்டும் முஸ்லிம் நாடகங்களை கேட்கக்கூடியதாக இருக்கும் என முஸ்லிம் சேவை பணிப்பாளர் அல்ஹாஜ் அல்ஹாபிஸ் எஸ் .எம்.ஹனீபா தெரிவித்தார்.

இதன்படி  எமது தயாரிப்பாளர் ஏ.எல் ஜபீர்  வாரம் ஒருமுறை முஸ்லிம் சேவையில் முஸ்லிம் நாடகங்களை தயாரித்தளிப்பார். மீண்டும் முஸ்லிம் நாடகங்களை ஒலிபரப்படும் இச்செய்தியானது நேயர்களுக்கு மட்டுமல்ல  வானொலிக்கலைஞர்களுக்கும் நாடக எழுத்தாளர்களுக்கும் ஒரு நற்செய்தியாகும் என்றும் முஸ்லிம் சேவை பணிப்பாளர்  நம்பிக்கை தெரிவித்தார்.

முஸ்லிம் சேவையில் முஸ்லிம் நாடகங்கள் இடைநிறுத்தப்பட்டமை குறித்து நேயர்கள் , வானொலிக்கலைஞர்கள் ,நாடக எழுத்தாளர்கள் பலரும் அதிருப்தியும் கவலையும், அடைந்திருந்தமை இங்கு குறிப்பித்தக்கது.

Post a Comment

Previous Post Next Post