'2025 இல் இலங்கை சபரிஸ்தான் ஆகும்": கண்டியில் இனக்குரோதமான சுவரொட்டிகள்


நேற்று (8.12.2012) கண்டி நகரிலும் சுற்றுப்புறங்களிலும் '2025இல் இலங்கை சபரிஸ்தான் ஆகும். முஸ்லிம் கடைகளில் பணம் கொடுத்து பொருட்களை வாங்குவோமா?" என இனக்குரோதமான சுவரொட்டிகள் பேரின வாதிகளால் ஒட்டப்பட்டுள்ளன.


கண்டியில் ஒட்டப்பட்டுள்ள இந்த  சுவரொட்டியை உற்று நோக்கினால் சில உண்மைகள் தெளிவாகிறது. இது எவனோ ஒரு கோமாளி செய்தான் எனக் கருத முடியாது. ஏனெனில் இவ்வாறான போஸ்டர்கள் தொடர்ந்து எழுதிப் பழக்கப்பட்ட ஒருவரது கைவண்ணமாக உள்ளது. எனவே அதன் பின்னணியில் ஒரு திட்டமிட்ட குழு செயற்படுகிறது என்பது தெளிவு.

அத்துடன் ஒட்டப்பட்டுள்ள இடங்கள் மறைவான இடங்கள் அல்ல. சன நெரிசல் மற்றும் பாதுகாப்புப் படையினர் போன்றவர்கள் நடமாடும் மிகப் பிரதான சந்தி எப்பொழுதும் பொலீஸார் சேவையில் இருக்கும் இடம். தைரியமாகச் சென்று ஒட்டுவதற்கு சாதாணை ஒருவனால் முடியாது.

மேலும் எமது சிந்தனையில் உதிக்காத யாருமே எதிர்பார்த்திராத ஒரு தனிநாட்டுப் பெயர் குறிப்பிடப்படுகிறது. அது ...ஸ்தான் என முடிவதனால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கசகிஸ்தான், என்ற அடிப்படையில் இதுவும் ஒரு ..ஸ்தான். சபரிஸ்தான் என்றால் என்ன? என்ற விபரம் தெரியாது.

அத்துடன் முஸ்லிம் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம் என்று அதில் கூறப்படவில்லை. வாங்குவோமா? எனக் கேட்பதன் மூலம் மிகப் புத்தி சாதுர்யமாக விசக் கருத்தைப் புகற்றுவதாக உள்ளது. இது முஸ்லிம் வர்த்தகர்கள் மீது ஒரு காழ்புணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

அகவே  இத்தவறான எண்ணம் பற்றி எம்மால் இயன்றவரை பெரும்பான்மை நண்பர்களிடம் தெளிவுபடுத்துவது தனிநபர்களின் ஒரு தார்மீகக் கடமையாகும். அதாவது ஆட்சியைக் கைப்பற்றும் எந்த எண்ணமும் எம்மிடம் இல்லை. அதற்கான எந்த முயற்சியும் எம்மிடமில்லை. என்பதை தெளிவு படுத்த வேண்டும். இதை அமைப்பு ரீதியாகச் செய்வதை விட தனிப்பட் ரீதியில் தத்தமது நண்பர்களுக்கு மத்தியில் அல்லது தொழில் செய்யுமிடத்து சகபாடிகளுடன் அல்லது வர்த்தகத் தொடர்புகளின் போது நாம் பிரதி பளிக்கலாம்.

மாறாக வர்த்தக நடிவடிக்கைகளின் போது ஒரு முஹ்மீன் என்பதை மறந்து சொற்ப லாபத்திற்காக  பொய்யையும் ஏமாற்று வித்தைகளையும் அரங்கேற்றுவோமாயின் இது அல்ல இதைவிடப் பாரிய சவால்களை எதிர்கொள்ளவேண்டி ஏற்பட்டாலும் ஆச்சரியம் இல்லை. அல்லாஹ் எம்மைக் காப்பாற்றுவானாக.


Post a Comment

Previous Post Next Post