யானை புளுக்கையால் தயாரிக்கப்பட்ட கோப்பி - ஒரு கப் இன் விலை 30 யூரோ-படங்கள்


ஒரு கப் 30 யூரோவுக்கு விற்கப்படும் கோப்பியைப்பற்றி கேள்விப்பட்டிருக் கிறீர்களா? அதென்ன ஸ்பெஷல் கோப்பி? யானையின் புளுக்கையிலிருந்து தயாரிக்கப்படும் கோப்பி தான் அது.

பிளாக் ஐவரி என்ற இந்த கோப்பியை தாய்லாந்தில் தயாரிக்கின்றனர். தாய்லாந்தின் சியாங் ராய் மாகாணத்தில் இந்நாட்டுடன் லாவோஸ் மியான்மர் நாட்டு எல்லைகள் சந்திக்கும் இடம் கோல்டன் டிரையாங்கிள். மலைப்பாங்கான பகுதி மூலிகைளுக்கு பிரசித்தி பெற்ற இடம்.

இங்கு இத்தகைய கோப்பி தயாரிப்பதற்காக தனியாக யானைகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றுக்கு புல் ,வாழைப்பழம், கரும்பு ஆகியவற்றுடன் கோப்பி கொட்டைகளையும் உண்ணக் கொடுக்கின்றனர்.

அந்த கோப்பி கொட்டைகள் யானையின் வயிற்றில் 15 முதல் 30 மணி நேரம் வரை ஜீரணமாகிறது. அப்போது உணவு நொதித்தல் காரணமாக அந்த கொட்டைகளில் சுவை கூடுகிறது.பின்னர், யானை புளுக்கையில் செரிக்காமல் வெளியேறியிருக்கும் கோப்பி கொட்டைகள் சேகரிக்கப்படுகின்றன. 

33 கிலோ கொட்டைகளை யானை உண்டால் ஒரு கிலோ கோப்பி கொட்டை மட்டுமே கிடைக்கும். இந்த கோப்பி ஒரு கப் தான்  30 யூரோக்கள்! இவ்வளவு குறைவாக கோப்பி கொட்டைகள் கிடைப்பதால் அதன் விலை மிக அதிகமாகிறது. 

இந்த கோப்பி கொட்டைகளை வறுத்து, அரைத்து தயாராவது தான் பிளாக் ஐவரி கோப்பி.இதன் விலை கிலோ 685 யூரோவாகும். இந்த கோப்பி வடக்கு தாய்லாந்து, மாலத்தீவு மற்றும் அபுதாபியில் உள்ள நட்சத்திர உணவகங்களில் ஒரு கப் 30 யூரோவாகும். 

தாய்லாந்து சென்றால்  யானை புளுக்கையிலிருந்து   தயாராகும் இந்த கோப்பியை ருசி பார்க்கலாம்.







Post a Comment

Previous Post Next Post