கிராம சேவை உத்தியோகத்தர் தரம் 3 இற்கு ஆட்சேர்ப்பதட்கான போட்டிப் பரீட்சைக்கு தயார்படுத்தும் நோக்கில் தமிழ் மொழி மூலமான பரீட்சத்திகளின் நலன் கருதி நாடளாவிய ரீதியில் கருத்தரங்கொன்றினை சட்டக் கற்கைகளுக்கான விழிப்புணர்வு மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.
இக்கருத்தரங்கானது கொழும்பில் எதிர்வரும் 22 ஆம் திகதி கொடஹென ரோயல் அகடமியிலும்> 23 ஆம் திகதி கண்டி கொடுகொடல்ல வீதியிலுள்ள என்.ஸீ.ஐ. நிறுவனத்திலும்> 25 ஆம் திகதி புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையிலும்> 26ஆம் திகதி காலி தலாபிடியவில் அமைந்துள்ள ஹாய் லய்ன் கல்வி நிறுவனத்திலும்> 27 ஆம் திகதி பேருவளை டீ.எம்.ஐ நிறுவனத்திலும் நடைபெறவுள்ளது.
இக்கருத்தரங்குகளில் துறைசார் சிரேஷ்ட வளவாளர்களினால் விரிவுரைகள் நடாத்தப்படவுள்ளதுடன்> முகாமைத்துவ உதவியாளர் சேவை தரம் 3 இற்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரிகளும் விரும்பின் கலந்து கொள்ளலாம்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை 0777479799> 0777944228> 0778874140 எனும் தொலைபேசி இலக்கங்களில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வமைப்பினால் நடாத்தப்படும் சட்டமாணி வகுப்புக்களில் கலந்துகொண்ட 6 மாணவர்கள் அண்மையில் திறந்த பல்கலைக்கழக அனுமதிப் பரீட்சையில் சித்தி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
சட்டக் கற்கைகளுக்கான விழிப்புணர்வு மன்றம்.