திஹாரியில் கடந்த 3 நாட்களாக திருடர்களின் அட்டகாசம்.


கடந்த மூன்று தினங்களாக திஹாரியில் சில இடங்களில் திருடர்களின் அட்டகாசம் இருந்ததாக எமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களில் பிரகாரம் ஊர்மனை, ஹாமீம் மாவத்தை, திஹாரிய சாந்தி (கண்டி வீதி) மற்றும் அம்பலத்தடி ஆகிய பிரதேசங்களில் சில வீடுகளில் திருடர்களால் களவாடப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.

குறிப்பாக நகைகள் மற்றும் பணம் என்பவையே திருடர்களின் பிரதான இலக்காக இருப்பதாக இதுவரை திருட்டுப்போயுள்ள வீடுகளிலிருந்து கிடைக்கும் தகவல்களின் படி ஊகிக்கக்கூடியதாக இருக்கிறது.

ஆகவே ஊர்மக்கள் இது தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Post a Comment

Previous Post Next Post