கழுகு ஒரு குழந்தையை தூக்கிச் செல்லும் வீடியோ, 3D யில் வடிவமைக்கப்பட்டது - வீடியோ


ஒரு கழுகு குழந்தையை தூக்கிச் சென்று பின்னர் விட்டு விடும் ஒரு காணொளி இணையத் தளத்தில் மிகவும் பிரபலமாகி உள்ளது. இந்த வீடியோவை நாம் கடந்த முன்று நாட்களுக்கு முன்னர் எமது இணையத்தில் பதிவேற்றி இருந்தோம்.

குறித்த வீடியோ பிரான்ஸ்  நாட்டில் உள்ள கணனி முப்பரிமான வரைபட பாடசாலையில் உள்ள நான்கு மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ உருவாக்கப்பட்ட விதம் தொடர்பாக மற்றுமொரு  வீடியோவை  அவர்கள்  நேற்று வெளியிட்டிருந்தனர். 

குறித்த வீடியோ மக்களை முட்டாள் ஆக்கும் நோக்கில் வெளியிடவில்லை எனவும், இது போன்ற நிகழ்வுகள் நடக்கலாம் அல்லது இது போன்ற வீடியோ காட்சிகளை கணனியில் உருவாக்க முடியும் என்பதை மக்களுக்கு அறியப்படுத்தும் நோக்கிலே நாம் இந்த வீடியோவை வெளியிட்டதாக அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.



Post a Comment

Previous Post Next Post