ரணிலின் பதவி காலம் 6 வருடங்களுக்கு நீடிப்பு - சஜித் பிரேமதாஸ உட்பட மூன்று எம்.பிக்கள் எதிர்ப்பு.


பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஐக்கிய தேசிய கட்சியின் 54 ஆவது மாநாடு கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று காலை 9 மணிக்கு ஆரமப்மானது. 

இம்மகாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க இன்னும் 6 வருடங்களுக்கு இருப்பதற்கான யோசனை பெரும்பான்யைமான வாக்குகளுடன் இன்று நிறைவேற்றப்பட்டது. 

கட்சி தலைமையின் பதவிகாலத்தை மேலும் 6 வருடங்களுக்கு நீடிப்பதற்கான யோசனையை ஜனாதிபதி சட்டத்தரணியும் எம்.பியுமான விஜேதாஸ ராஜபக்ஷ முன்மொழிந்தார். அதனை அஜித் பி.பெரேரா எம்.பி வழிமொழிந்தார். 

இம்  மாநாட்டிற்கு 6143 பேருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பிவைக்கப்பட்டன. அதில் 5315 பேர் மாநாட்டிற்கு வருகைதந்திருந்தனர்.

அவர்களில் தலைமைப்பதவியை ஆறு வருடங்களுக்கு நீடிப்பதற்கான யோசனைக்கு 4978 பேர் ஆதரவாகவும் 337 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர்.  

இதேவேளை ரணில் விக்ரம சிங்கவின் தலைமைப் பதவியை மேலும் ஆறு வருடங்களுக்கு நீடிப்பதற்கான யோசனைக்கு அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட தயாசிறி ஜயசேகர, தலதா அத்துகோரளை மற்றும் புத்திக பத்திரண ஆகியோரே எதிர்ப்பு தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post