கம்பளையிலும் முஸ்லிம் விரோத சுவரொட்டிகள்


கம்பளையிலும் முஸ்லிம்களை மிக மோசமாக தூசிக்கும் சுவரொட்டிகள் நகரில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது. அவற்றில் முஸ்லிம்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்யாதே , முஸ்லிம் வர்த்தகர் நிலையங்களுக்கு செல்லாதீர்கள், பெளத்த பெண்களை முஸ்லிம் வீடுகளுக்கு வேலைக்கு அனுப்பாதீர்கள் என்றும் குறிப்பிட்டப் பட்டுள்ளது .

அதேவேளை பரவலாக முஸ்லிம் விரோத SMS கள் அனுப்பப்பட்டு வருகின்றது . இது நாட்டின பரவலாக பரிமாறப்பட்டு வருகிறது.

மேற்படி சுவரொட்டிகளில் முஸ்லிம்கள் மோசமான முறையில் தூசிக்கப் பட்டுள்ளனர் . இது தொடர்பாக முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கும் , அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவுக்கும் , பிரதமர் டி.எம். ஜெயரத்னவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் குறித்த சுவரொட்டிகள் கிழிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

நன்றி: லங்கா முஸ்லிம் 

Post a Comment

Previous Post Next Post