சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில் நடைபெற்ற சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் முதலாமிடத்தை இலங்கை மாணவன் ரிப்தி முஹம்மத் ரிஸ்கான் பெற்றுள்ளார்.
83 நாடுகள் பங்கு பங்குபற்றிய இப்போட்டியில் முதலாமிடத்தை பெற்றுக்கொண்ட கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மதீனத்துல் இல்ம் அரபுக் கல்லூரியின் 14 வயதுடைய மாணவன் ரிப்தி முஹம்மத் ரிஸ்கான் இன்று காலை நாடுதிரும்பினார்.
நாடு திரும்பிய மாணவன் ரிஸ்கானுக்கு விமான நிலையத்தில் புத்த சாசன மற்றும் சமயவிவகார பதில் அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்த்தன தலைமையிலான குழுவினரால் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.
