உங்களின் உதவியை நாடும் சகோதரன் மாவனல்ல நபீல் - படங்கள்


மாவனல்ல ஹெம்மாத்தகம இல: 20 ஹிஜ்ராகம பிரதேசத்தில் வசிக்கும் சகோதரன் M.Z.M. நபீல், வயது 18, கடந்த மூன்றரை வருடகாலமாக இரு கால்களும் செயலிழந்து தனது இளமைப் பருவத்தை வீட்டினுள் கழிக்கும் ஒரு திறமை மிகுந்த சகோதரன்.

இவரது தந்தை முஹம்மத் ஸகரியா சாதாரண கூலித்தொழிலாளி, தாய் பாத்திமா நஜீதா இல்லத்தரசி, சகோதரன் முஹம்மத் ஸகி (22 வயது), தங்கை பாத்திமா அகீலா இம்முறை க.பொ.த. சாதரா தர பரீட்சை எழுதி வருகிறார். 

குடும்பத்தின் வறுமையினாலும், அறியாமையினாலும்  குழந்தை பருவத்தில் வழங்கப்படும் நோய்த் தடுப்பு மருந்துகள் சரியான முறையில் வழங்கப்படாமையினால், கிருமித் தொற்று ஒன்றின்  காரணமாக கடந்த மூன்றரை வருடங்களுக்கு முன்னர் இந்த சகோதரரின் இரு கால்களும் செயலிழக்க ஆரம்பித்தது. இதன் விபரீதம் அறியாத பெற்றோர் இரண்டு   வருடங்களின் பின்னரே வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதன் பொழுது இந்த சகோதரரின் இரு கால்களும் முற்றாக செயலிழந்து இருந்தது. இவரை பரிசோதித்த வைத்தியர்கள் இவரின் கால்களை மீண்டும் சரி செய்ய முடியாது என கூறினார்கள்.

இதன் பின்னர் வைத்தியசாலை வைத்தியர்களின் ஆலோசனைக்கு இணங்க இவர் ராகம புனருத்தாபன வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டார். அங்கு இவருக்கு கால்களுக்கான உடட்பயிட்சிகள் வழங்கப்பட்டது, அப்பயிற்சிகளும் பலனளிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து ராகம புனருத்தாபன வைத்தியசாலையில் இவரின் எதிர்காலத்தை முன்னிட்டு  கணனி பயிற்சிகள் வழங்கப்பட்டது. கடந்த ஒரு வருடகாலமாக இவர் ராகம புனருத்தாபன வைத்தியசாலையில்  கணனி பயிற்சி பெற்றுவரும் இவரின் பயிற்சிக்காலம் இன்னும் ஓரிரு தினங்களில்  நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கணனி பயிற்சியை முடித்துவிட்டு இன்னும் ஓரிரு தினங்களில் வீட்டுக்கு வரவிருக்கும் தனது மகனுக்கு பலகையால் கழிவறையுடன் கூடிய கதிரை ஒன்றை செய்து வைத்திருக்கிறார் தந்தை.

இந்நிகழ்வுகள் இப்படி இருக்கையில் இவரின் நண்பர் ஒருவரின் உதவியுடன் எமது திஹாரிய நியூஸ் இணையத்தை தொடர்புகொண்ட இவர் தனது எதிர்காலத்திற்கு ஒரு  உதவிகளை செய்து தாருங்கள் என கேட்டுகொண்டார்.

அவர் கேட்டுக்கொண்ட உதவி:
எனது  தந்தை எனக்காக செய்திருக்கும் கழிவறையுடன் கூடிய கதிரையில்  தூக்கி வைத்துவிட்டு எனது தேவைகள் முடிந்ததும் கிழே இறக்கி வைத்துவிட்டு கூலி வேலைகளுக்காக வெளியில் சென்று விடுவார். அவர் இல்லாத தருணத்தில் தாய் அல்லது சகோதரி இந்த உதவிகளை எனக்கு செய்வார். இது தான் வழமையாக நான் விடுமுறைகளின் பொழுது வீட்டுக்கு சென்ற வேளையில் நடைபெற்று வந்தது.


இதன்பின் நிரந்தரமாக வீட்டில் இருக்க இருக்கும் எனக்கு இது மிகுந்த சிரமமாக இருக்கும். தற்பொழுது கணனி பயிற்ச்சியை முடித்திருக்கும் எனக்கு வீட்டில் இருந்தவாறு கணணித்துறையில் சம்பாதித்து முன்னோக்கி செல்ல ஆசையாக இருக்கிறது. இதற்கான  கணணி ஒன்றை நேற்று (15-12-2012) ஒருவர்  எனக்கு அன்பளிப்புச் செய்தார். அகவே இதற்கு உதவியாக கழிவறையுடன் கூடிய சக்கர  நாற்காலி ஒன்றை பெற்றுத்தருவதற்கு உதவினால் அது நீங்கள் எனக்கு செய்யும் பெரும் உதவியாக இருக்கும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

கழிவறையுடன் கூடிய சக்கர  நாற்காலி


தொடர்புகளுக்கு:
சகோதரன் M.Z.M. நபீல் : 0725874372
சகோதரன் சிபான் : 0773521306  (நபீலின் நண்பன்)

குறிப்பு:
இதை படித்துவிட்டு மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இது தொடர்பான பிந்திய  செய்தி 

1 Comments

Previous Post Next Post