ஹகீம் நீதித்துறையை முஸ்லிம் மயப்படுத்திவிட்டதாக பந்துல சந்திரசேகர குற்றச்சாட்டு.


சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை பெறுபேறுகளில் இந்த வருடம் அதிகளவான முஸ்லிம்கள் தெரிவாகியுள்ளமைக்கு நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமின் பக்கச்சார்பான செயற்பாடுகளே காரணம் எனத் தெரிவித்துள்ள தேசிய புலமையாளர்கள் கவுன்சிலின் தலைவர் பந்துல சந்திரசேகர, அமைச்சர் நீதித்துறையை முஸ்லிம் மயப்படுத்திவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளதாக சிங்கள, ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

"இந்த ஆண்டு சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சையில் 309 பேர் சித்தியடைந்துள்ளனர். இவர்களில் 191 பேர் சிங்கள மாணவர்கள். 78 பேர் முஸ்லிம்கள். 40 பேர் தமிழ் மாணவர்கள்.
 
கடந்த வருடங்களில் 10 முதல் 15 வரையான முஸ்லிம் மாணவர்களே சித்திடைந்திருந்தனர். ஆனால் இம் முறை வழமைக்குமாறாக இத்தொகை 78 ஆக அதிகரித்துள்ளது. மாத்திரமன்றி தமிழ் மொழி மூலத்தில் முதல் மூன்று இடங்களையும் முஸ்லிம்களே பெற்றுள்ளனர். சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ள முதல் 50 பேரில் 28 பேர் முஸ்லிம்களாவர். 
 
இப் பரீட்சை வினாத்தாள் ஆங்கிலத்திருந்து சிங்களத்திற்கும் தமிழுக்கும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிபெயர்ப்புக்காக நியமிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் முஸ்லிம்களேயாவர். 
 
நீதியமைச்சர் ஹகீம்  நீதிபதிகளையும் நீதித்துறை அதிகாரிகளையும் நியமிப்பதில் மாத்திரமன்றி சட்டக் கல்லூரி அனுமதியிலும் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை அளிப்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது" என்றும் அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதேவேளை இக் குற்றச்சாட்டு தொடர்பில் நீதியமைச்சர் ரவூப் ஹகீம்  விளக்கமளிக்கவுள்ளதாக அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நன்றி: விடிவெள்ளி

Post a Comment

Previous Post Next Post