ஐந்து கோள்களை காணும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு


எதிர்வரும் 15ஆம் திகதி வரை ஐந்து கோள்களை காணும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிட்டியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவிக்கிறார்.

சூரிய மணடலத்தின் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்களை மக்கள் காண முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் வியாழன் கோள் புவியை மிகவும் நெருங்கவுள்ளதால் இன்றிரவு வானில் அதனை பிரகாசமாக காண முடியும் எனவும் பேராசிரியர் கூறியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post