மஹியங்கனை நகரில் உள்ள பஸ் நிலையத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மஹியங்கனை ஜும்ஆ பள்ளிவாசலை புதிதாக நிர்மாணம் செய்வதற்கும் அங்குள்ள முஸ்லிம் வியாபார நிலையங்களில் சிங்கள பெண்களை வேலைக்கு அமர்த்துவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மஹியங்கனை பழைய பள்ளிவாசலை புதுப்பிக்கவே இவ்வாறு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹியங்கனை பஸ் நிலையத்தில் அனாமேதய சுவோரோட்டிகளாக காணப்படும் இதுபோன்ற சில சுவரொட்டிகளால் அங்குள்ள முஸ்லிம்கள் அச்சமடைந்துள்ளனர்.
குறித்த சுவரொட்டியில் புதிதாக பள்ளிவாசல நிர்மானத்துக்காக பணம் வசூலிப்பதை நிறுத்துமாறும் சிங்கள பெண்பிள்ளைகள் முஸ்லிம்களின் கடைகளில் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்ய வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் எம்பிலிபிடியவில் நேற்றைய தினம் இரண்டு முஸ்லிம் வியாபாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பவ்சி குறித்த சம்பவத்தை பாதுகாப்பு செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
தகவல் : விடிவெள்ளி
