சவூதிஅரேபியாவிலுள்ள 15 வருடமாக பணியாற்றும் இலங்கைப் பணிப்பெண் ஒருவருக்குக்கு இருந்த வலிப்பு வியாதி ஸம்ஸம் நீரினால் குணமானதை அடுத்து அவர் இஸ்லாத்தில் நுழைந்ததாக லங்கதீப இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ராஜூ என்ற தன் இயற்பெயரை தற்பொழுது பரீதா என மாற்றி உள்ளதாக அச் செய்தி தெரிவிக்கிறது. தனது வீட்டு எஜமானியின் ஆலோசனைப்படி இயன்ற அளவு ஸம்ஸம் நீரை அருந்தியதால் இரு வராங்களில் நோய் குணமடைந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
