பயணத்திற்கு தகுதியற்ற பேருந்துகள் அதிகம் - குமார வெல்கம.


இலங்கை போக்கு வரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் அதிகமானவை பயணத்திற்கு தகுதி அற்றதாக இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

இதன் படி சுமார் 1800 பேருந்துகள் போக்குவரத்திற்கு தகுதி அற்றவை என இனம்கானப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் நீர்பாசனம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றுக்கான ஒதுக்கங்கள் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post