தம்புள்ளை பள்ளிவாசல் ஒரு நிரந்தர கட்டிடம் அல்ல, அமாணா சீட்டுகளினாலேயே அது அமைக்கப்பட்டுள்ளது. அதனை சூழ சில முஸ்லிம் குடும்பங்கள் உள்ளன. தம்புள்ளை நகருக்குள் புதிதாய் பள்ளிவாசலை நிர்மாணிப்பது வரவேற்கத்தக்க விடயம் என குருநாகலை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரான அப்துல் சத்தார் தெரிவித்தார்.
புனித பூமி மற்றும் வீதி அபிவிருத்தி காரணமாக அப்பள்ளிவாசல் அகற்றப்படப் போவது உறுதி.இந் நிலையில் வறட்டு கெளரவம் மற்றும் பிடிவாதம பிடிப்பது பயனளிக்காது.
தூரநோக்கோடு சிந்தித்து தம்புள்ளை நகருக்குள் புதிதாய் பள்ளிவாசலொன்றை நிர்மாணிப்பது சிறந்தது. இது விடயத்தில் திருப்தி காணப்படின் நான் ஜனாதிபதியுடன் பேசி அதனை அமுல்படுத்தத் தயார் என தெரிவித்தார்.
நன்றி - விடிவெள்ளி
