நிலவும் சீரற்ற காலநிலை : திஸ்ஸமஹாராமயில் இறால் மழை


நாட்டின் பல பாகங்களிலும் சிகப்பு மழை மற்றும் மீன் மழை பெய்து வருகின்ற நிலையில், திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இறால் மழை பெய்துள்ளது.  திஸ்ஸமஹாராம விகாரைப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை இந்த இறால் மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். 

நாட்டில் சில பகுதிகளில் பெய்த மீன் மழை, ஜெலி மழை, சிவப்பு மழை, மஞ்சள் மழையைத் தொடர்ந்து திஸ்ஸ மஹாராம விகாரைப் பகுதியில் இன்று இறால் மழை பெய்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையால் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளதோடு ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப் பட்டுள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் பல அதிசய நிகழ்வுகளும் இடம்பெற்ற வண்ணம் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

Previous Post Next Post