திஹாரிய நாப்பிரித்தை (பண்டார நாயக பிளேஸ்) பிரதேசத்திற்கு உள்வாங்கும் பிரதான பாதையின் தொடக்கத்திலே இருக்கும் குப்பைகள் தொடர்பாக எமது இணையம் கடந்த 01-12-2012 அன்று ஒரு செய்தியினை வெளியிட்டிருந்தது. இந்த செய்தி தொடர்பாக அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் அஷ்ரப் அவர்களது கருத்துக்களையும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுகள் இப்படி இருக்கையில் குறிப்பிட்ட அந்த இடத்தில் " இந்த இடத்தில் குப்பைகள் போடுவது தடை" என்ற ஒரு பதாகை அத்தனகல்ல பிரதேச சபைத் தலைவர் அவர்களின் வேண்டுகோளின் பேரில் போட்டப்பட்டுள்ளதை எம்மால் அவதானிக்க முடிந்தது.
கவலைக்குரிய விடயம் என்னவென்றால் குறித்த " இந்த இடத்தில் குப்பைகள் போடுவது தடை" என்ற பதாகை போடப்பட்டிருந்தும் அந்த இடத்தில் குப்பைகள் போடப்பட்டிருந்ததை எம்மால் அவதானிக்க முடிந்தது. சில சமயம் சிங்களம் வாசிக்க தெரியாதவர்களின் வேலையாகக்கூட இருக்கலாமோ?
இது தொடர்பான முந்தைய செய்திகள் :
Tags
திஹாரிய செய்திகள்