நளீம் ஹாஜியார் நாமமிடப்பட்ட மாணிக்கக்கல்லுக்கு உரிமை கோரும் முதியவர்.


அண்மையில் ஓனிக்ஸ் அன் லிமிட்டெட் இன்டர் நேஷனல் நிறுவனத்தால் நளீம் ஹாஜியாரின்  நாமம் இடப்பட்ட அலக்ஸான்ரைட் வகை மாணிக்கக்கல் தன்  சொத்து என்று உரிமை கோருகிறார் வியங்கல்லை அகலவத்தையைச்  சேர்ந்த A.H.M. ஸலீம் என்ற முதியவர்.

ரூபி, சபயார், எமரல்ட் போன்ற உலகின் பெறுமதி மிக்க மாணிக்க வகைகளை விடவும் பெறுமதி கூடிய அலக்ஸான்ரைட் வகை மாணிக்கக்கல் ஒன்றிற்கே  நளீம் ஹாஜியாரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பேருவளை ஜாமியா நளீமியாவின் ஸ்தாபகரும் பிரபல மாணிக்கக்கல் வியாபாரியுமான மர்ஹூம் நளீம் ஹாஜியாரை கண்ணியப்படுத்தும் முகமாகவே அவரது நாமம் இக்கல்லுக்கு இடப்பட்டது.

தனது கல் என்று உரிமை கோரும் ஸலீம் இக்கல்லைத் தான் வெலிப்பனை ஆற்றில் கண்டெடுத்ததாகவும் வீட்டுக்குள் இருந்த ஒருவர் நம்பிக்கைத் துரோகம் செய்து கல்லைத் திருடி குறைந்த விலைக்கு விற்றுள்ளார் என்றும் யார் யாரின் கைக்கெல்லாம் மாறிச் சென்றுள்ளது  என்பதை அறிய முடியாதிருப்பதாகவும் கூறுகிறார்.

கல் திருட்டுப்போனமை தொடர்பாக 2011-08-01 இல் களுத்துறை  பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள இவர், தேசிய தமிழ் பத்திரிக்கை ஒன்றில் 2007.01.21 அன்று விளம்பரமும் செய்துள்ளார். அத்தோடு பொலிஸ்மா அதிபருக்கும் முறைப்பாடு செய்துள்ளார்.

நன்றி - நவமணி 

Post a Comment

Previous Post Next Post