எம்பிலிபிட்டிய நகரில் பொதுச் சந்தையில் வியாபாரம் செய்து வரும் முஸ்லிம்கள் இருவர் மீது பெளத்த கடும்போக்காளர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த சந்தையில் வியாபாரம் செய்யவேண்டாம் என கூறியே இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எம்பிலிபிட்டிய வாராந்த பொதுச் சந்தையில் முட்டை மற்றும் துணி (கட்பீஸ் ) வியாபாரத்தில் ஈடுபடும் இருவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் எம்பிலிபிட்டிய காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நன்றி: விடிவெள்ளி
