ஹலால் சான்றிதழுக்கு எதிராக எம்பிலிபிட்டியில் ஹெல உறுமய ஆர்ப்பாட்டம்.


சந்தையில் பொருட்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஹலால் உத்தரவாதத்தை ரத்து  செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி ஜாதிக ஹெல உறுமய இன்று 24-12-2012 முற்பகல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் எம்பிலிபிட்டி நகர மத்தியில் முன் எடுக்கப்பட்டது.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்  ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் மற்றும் எம்பிலிபிட்டிய நகர சபைத் தலைவர் வேவல்துட்டுவ ஞான பிரபா தேரர் ஆகியோருடன் உள்ளிட்ட ஏராளமான தேரர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Post a Comment

Previous Post Next Post