முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் பின்னணியில் அரசு செயற்படுகிறதா? அசாத் சாலி


முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நாட்டில் அதிகரித்துள்ள நிலையில் அவற்றின் பின்னணியில் அரசு செயற்படுகிறதா? என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது என முன்னாள் கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நாட்டில் அதிகரித்துள்ளன. முஸ்லிம்களை இலக்குவைத்து  நாடு 100 வருடங்கள் பின்னால்   செல்ல முயற்சிக்கின்றது. முஸ்லிம்களை இலக்கு வைப்பதற்காகவே ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 

அதற்கு அரசாங்கம் அனுசரணை வழங்குகின்றது. இது ஆபத்தான விடயமாகும் என்பதனால் இது தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்றார்.

Post a Comment

Previous Post Next Post