உலகில் அதிக வயதுடைய நபரான பெண் தனது 116 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமாகியுள்ளார். ஜோர்ஜியா மாநிலத்தின் மொன்றோ என்ற பகுதியிலுள்ள வைத்தியாசலையொன்றில் பேஷி கூப்பர் என்ற குறித்த பெண் இயற்கை எய்தியுள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
1929 ஆம் ஆண்டு தனது முதலாவது குழந்தையை பிரசவிக்கும் வரை அவர் பாடசாலையொன்றில் கடமையாற்றியுள்ளார். பேஷி கூப்பருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளதுடன், அனைவரும் சிறந்த உடல் நலத்துடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
2011 ஆம் ஆண்டு உலகில் அதிக வயதுடைய பெண்ணாக பேஷி கூப்பர் பதிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags
உலகச் செய்திகள்


