சகோதரனைச் சந்தேகப்படாதீர்கள் : முஸ்லிம்களிடம் கமலஹாசன் அறிக்கை


விரைவில் திரைக்கு வரவுள்ள விஸ்வரூபம் திரைப்படம் பற்றி கமலுக்கு எதிராக திரையரங்க உரிமையாளர்களும் சிறுபான்மை முஸ்லிம்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் மூன்று பக்க அறிக்கை ஒன்றினை கமலஹாசன் வெளியிட்டுள்ளார். அதில் முஸ்லிம்களுக்கு விளக்கம் அளிக்கும் பகுதி இது:

விஸ்வரூபம் முஸ்லிம்களை தவறாகச் சித்தரிக்கும் படம் என்று ஒரு சில முஸ்லிம் அமைப்புகள் சந்தேகப்படுகிறதாம். இந்த முஸ்லிம்கள் படத்தை பார்த்து, மனம் மாறி, தேவையில்லாமல் கமல்ஹாசனை சந்தேகப்பட்டு விட்டோமே என்று மனதிற்குள் வருந்துவர். அவர்கள் மனதிற்குள் வருந்தினால் மட்டும் போதாது. நான் விடமாட்டேன். சகோதரனைச் சந்தேகப்பட்டதற்கு பிராயச்சித்தமாக அந்த முஸ்லிம் சகோதரர்கள் அடுத்த பக்ரீத்துக்கு அண்டா அண்டாவாக பிரியாணி விருந்தளிக்க வாக்களிக்க வேண்டும்.

அத்தனை பிரியாணியையும் நான் ஒரு ஆள் சாப்பிட இயலாது. ஆதலால் நம் அன்பின் சான்றாக பசித்த ஏழைப் பிள்ளைகளுக்கு அதை விருந்தாக்குங்கள் எப்போதும் போல அக்குழந்தைகளின் சாதி-மதம் பார்க்காமல் அதைச் செய்யுங்கள். அப்பெரும் விருந்தில் கலந்துகொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கமல் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post