தற்போது பெய்துவரும் கடும் மழையினையடுத்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் புத்தளம் மாவட்டத்தில் சிலாபம், ஆராச்சிக்கட்டு பிரதேசங்கள் உட்பட பல்வேறு பிரதேசங்களிலிருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இடம் பெயர்ந்துள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தின் பணிப்பாளர் கேர்ணல் ரத்னவீர தெரிவித்தார்.
கடந்த 3 தினங்களாக புத்தளம் மாவட்டத்தில் தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் ஏற்பட்ட நீரின் அதிகரிப்பால் பங்கதெனிய, ஆராச்சிக்கட்டுவ, மாதம்மை, மஹாவௌ உள்ளிட்ட பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும்,பாதிப்புக்குள்ளான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கென 35 தற்காலிக தங்குமிடங்கள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
படங்கள் மற்றும் வீடியோ : நியூஸ் 1st
படங்கள் மற்றும் வீடியோ : நியூஸ் 1st








