இலங்கை வான்பரப்பில் தெரியும் மாய ஒலி - படம் மற்றும் வீடியோ


நாட்டின் பல பாகங்களிலும் இரவு வேளைகளில் தென்பட்ட மாய ஒளி அனேகமாக ஒரு கோளாக இருக்கலாம் என விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் சிராஜ் ஜலால்தீன் தெரிவித்துள்ளார்.


கம்பஹா, சிலாபம், அநுராதபுரம் உள்ளிட்ட பல இடங்களிலும் மாய ஒலிகளை தெளிவாக அவதானிக்கக்கூடியதாக இருந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. 


இது தொடர்பில் விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் சிராஜ் ஜலால்தீன் கூறுகையில், குறித்த ஒளிப்பிழம்பினை கண்காணிக்கும் முகமாக 24 மணிநேர சேவையில் விமானப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது வான்பரப்பு முழுவதுமாக அவதானிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதற்காக விசேட திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரையில் ஒளிப்பிழப்பினை விமானப்படையினரால் காணமுடியவில்லை. ஏனெனில் ஓளியாக மட்டும் தென்படுவதால் அது விமானப்படையின் ராடர் கருவிகளில் பதிவாகும் வாய்ப்புக்கள் குறைவு. மேலும் கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விசேட குழுவொன்றும் இது தொடர்பில் அவதானிக்கின்றது. குறித்த ஒளிப்பிழம்பு ஒரு கோளாக இருக்கலாம் எனவும் அக்குழு குறிப்பிட்டுள்ளது. எனவே மக்கள் வீணாக அச்சம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்றார்.






Post a Comment

Previous Post Next Post