திஹாரிய நாப்பிரித்தை (பண்டார நாயக பிளேஸ்) பிரதேசத்திற்கு உள்வாங்கும் பிரதான பாதையின் தொடக்கத்திலே இருக்கும் குப்பை தொடர்பாக இன்று காலை திஹாரிய நியூஸ் இணையத்தளம் மற்றும் Alert 1st சுட்டிக்காட்டி இருந்தது. இந்த செய்தி பிரசுரமாகி சில மணித்தியாலங்களில் திஹாரிய நியூஸ் இணையத்தை தொடர்பு கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் M.S.M. அஷ்ரப் இந்த விடையம் தொடர்பாக விளக்கமளித்தார்.
திஹாரிய பிரதேசத்தில் 25 குப்பை தொட்டிகளை கட்டும் தனது நடவடிக்கையின் முதல் கட்டமாக சென்றல் பிளேஸ் வயலருகில் ஒரு குப்பைத் தொட்டி அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நாப்பிரித்தை பிரதேசத்திற்கு உள்வாங்கும் பிரதான பாதையின் தொடக்கத்திலே ஒரு குப்பை தொட்டி அமைக்க தான் முயற்சிகள் எடுத்ததாகவும் அதற்கான அனுமதியை RDA வழங்கி பின்பு அதை நிராகரித்ததாகவும் அவர் எமக்கு தெரிவித்தார்.
நாப்பிரித்தை பிரதேச மக்கள் தன்னுடன் இணைந்து மீண்டும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு RDA யில் அனுமதி பெற்று ஒரு இடத்தை ஒதுக்கித்தந்தால் தான் குப்பைத் தொட்டி ஒன்றை கட்டித்தர தயாராக உள்ளதாக அவர் எமக்கு உறுதியளித்தார். அத்துடன் திஹாரியில் இன்னும் சில இடங்களில் குப்பை தொட்டிகளை அமைக்க தான் முயற்சி எடுத்த போதும் RDA அதற்கான அனுமதியை வழங்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
Tags
திஹாரிய செய்திகள்
