வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிங்கள சகோதரர்களுக்கு முஸ்லிம்கள் உதவி


புளிச்சாக்குளம் புதுக்குடியிருப்பில் வசிக்கும் முஸ்லிம்கள் ஆராச்சிக்கட்டு பகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்கு சமைத்த உணவுகளை கொண்டு சென்று பரிமாரினர்.

இந்த பகுதியில் முஸ்லிம்களது வாகனங்கள் விபத்துகளின் போது சேதப்படுத்தபடுவதும் பல பிரச்சினைகள் இரு கிராமத்துக்கும் இதற்கு முன் ஏற்பட்டுள்ளதும் இந்த செயலால் குறைக்க பட்டது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.பீ பாருக்; முன்னால் வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ், ஆராச்சிக்கட்டு பிரதேச சபை உறுப்பினர் சீ எம் எம் சரீப்; சிலாபம் நஸ்ரியா மத்திய கல்லுரி அதிபர் நாஸிம் மௌலானா, மற்றும் வடமேல் மாகாண வீடமைப்பு கடற்றொழில் வீதி புனரமைப்பு அமைச்சர் சனத் நிசான்த ஆகியோரும் பங்கேற்றனர்.

19-12-2012 அன்று மக்கள் உண்ண உணவின்றி சிரமப்பட்ட போது செய்யப்பட்ட இந்த உதவி இரண்டு இணங்களுக்கும் ஊர்க ளுக்குமான நட்புறவை பேண வழி சமைக்கும் என பலரும் கருத்து தெரிவித்தனர்.

நன்றி : புத்தளம் ஓன்லைன் 




Post a Comment

Previous Post Next Post