பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ஷிராணியை நீக்க போதுமான ஆதாரம் உள்ளது - விசேட தெரிவுக்குழு


பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான மூன்று பிரதான மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர் குற்றவாளி என நிரூபணமாகி இருப்பதாகவும் இவை அவரை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்குவதற்கு போதுமானவை எனவும் விசேட தெரிவுக்குழு தீர்மானித் துள்ளது.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக் கவுக்கு எதிரான 14 குற்றச்சாட் டுகளில் முதல் 5 குற்றச்சாட்டுகள் தொடர்பில் தெரிவுக்குழு விசாரணை நடத்தியபோதும் அதில் 1ஆம், 4ஆம், 5ஆம் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அவர் குற்றவாளி என முடிவு செய்யப் பட்டுள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். மூன்று கம்பனிகள் தொடர்பான வழக்கு, வங்கிக் கணக்கு தொடர்பில் தெளிவின்மை, தனது கணவரின் வழக்கில் பாரபட்சமாக நடந் தமை ஆகிய னவே அவை.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் தெரிவுக்குழு உறுப்பினர்கள் நேற்று பாராளுமன்றக் கட்டடத்தில் விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தினர். இங்கு உரையாற்று கையிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

பிரதம நீதியரசருக்கு தமது தரப்பு நியா யத்தை முன்வைக்க அவகாசம் வழங்கப் படவில்லை என்று தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த அவர், பிரதம நீதிய ரசருக்கு அறிவித்ததன் பிரகாரம் அவர் நவம்பர் 21ஆம் திகதி எழுத்துமூலமான பதில் வழங்கியதோடு

23ஆம் திகதி தெரிவுக்குழு முன் ஆஜரானார். தெரிவுக்குழு டிசம்பர் 4,5,6,7 ஆகிய தினங்களில் கூடியது 6ம் திகதி பிரதம நீதியரசர் தமது பக்கநியாயத்தை தெரிவிக்காது தெரிவுக்குழுவை அவமதித்து வெளியேறினார். பின்னர் எதிர்க்கட்சி உறுப் பினர்கள் வெளியேறினர். 7ஆம் திகதி 16 சாட்சிகள் தருவிக்கப்பட்டனர். இதில் உச்சநீதிமன்ற நீதியரசர் ஷிராணி திலகவர்தன, நீதிச்சேவை ஆணைக்குழு செயலாளர், உச்சநீதிமன்ற பதிவாளர், உள்நாட்டு இறைவரித் திணைக்கள உயரதிகாரிகள், ஆகியோரும் அடங்குவர். 4 உறுப்பினர்கள் விலகினாலும் தெரிவுக்குழு கூட போதுமான கோரம் காணப்பட்டது.

ஆளும்தரப்பு உறுப்பினர்கள் சிலர் மோசமான வார்த்தை பிரயோகங்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. சகல சாட்சியங்கள், விசாரணைகள் பதிவு செய்யப்பட் டுள்ளன என்றார்.

டிரில்லியம் வீட்டுகொடுக்கல் வாங்கல், மோசடி, வங்கிக் கணக்கு சொத்துமதிப்பு தொடர்பில் சொத்து விபர அறிக்கையில் குறிப்பிடாமை, கணவனுக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்கு தொடர்பில் பக்கசார்பாக நடந்து கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபணமாகின.

2,3ஆம் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். நிரூபிக்கப்பட்ட 3 குற்றச்சாட் டுகளும் பாரதூரமானவை. தெரிவுக்குழுவுக்கு ஒரு மாத காலமே வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஏனைய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து காலம் கடத்தாது இருக்க முடிவு செய்யப்பட்டது.

தெரிவுக்குழுவின் அறிக்கை கையளிக்கப் பட்டதினத்தில் இருந்து ஒரு மாத காலம் இந்த விடயம் தொடர்பில் எதுவித அடுத்தகட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளல் கூடாது நிலையியற் கட்டளையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மாதத்தின் பின்னர் இது தொடர்பில் விவாதம் நடத்தப்படும்.

பிரதம நீதியரசர் தொடர்ந்து விசாணைகளுக்கு வந்திருந்தால் தெரிவுக்குழுவுக்கு மேலும் கால அவகாசம் தேவைப்பட்டிருக்கும் ஒரு மாத காலம் சபாநாயகரிடம் கோர இருந்த நிலையிலே எதிர்கட்சி உறுப்பினர்கள் விலகினர் என்றார்.

இதில், அமைச்சர்களான சுசில் பிரேம் ஜெயந்த, டிலான் பெரேரா, விமல் வீர வங்ச, ராஜித்த சேணாரத்தன பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா ஆகிய தெரிவுக்குழு உறுப்பினர்களும் இங்கு கருத்துக் தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post