குழந்தையைத் தூக்கிச் செல்லும் கழுகு (வீடியோ இணைப்பு)

ஒரு கழுகு, குழந்தையை தூக்கிச் சென்று பின்னர் விட்டு விடும் ஒரு காணொளி இணைய தளத்தில் மிகவும் பிரபலமாகி உள்ளது.


ஏறத்தாழ ஆறு அடிகள் அகலமுள்ள அந்தக் கழுகு மாண்டிரேலில் உள்ள ஒரு பூங்காவில் விளையாடிக்கொண்டிருக்கும் ஒரு குழந்தையை திடீரென தூக்கிச் செல்கிறது. பின்னர் சிறிது தூரம் சென்றவுடன் கீழே போடுகிறது. புற்தரையில் விழும் குழந்தைக்கு அதிர்ஷ்டவசமாக பலத்த காயம் ஏதும் ஏற்படவில்லை.


இந்த வீடியோவைத் தற்போது யுடியூபில் ஏறத்தாழ 13 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஆனால் பல பத்திரிகையாளர்கள் இது ஒரு போலி வீடியோ போல் தெரிவதாக கருத்துக் கூறியுள்ளனர். திடீரென கழுகின் நிழல் தெரிவதாகவும் அதற்கு முன்னர் அது தெரியவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post