திஹாரியிற்கு ஒரு பொது விளையாட்டு மைதானத்தை அமைக்கும் முயற்சியை முன்னெடுத்திருக்கும் திஹாரிய யூத் விளையாட்டுக்கழகம், முதல் கட்டமாக ஒரு இடத்தை கொள்வனவு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக இதற்கான பணத்தை சேகரிக்கும் நோக்கில் "கிடுகு" ஒன்றை இம்மாதம் 30 ஆம் திகதி விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது.
இதற்கான டிக்கட்டுகள் விற்பனை செய்யும் நிகழ்வு இன்று ஆரம்பமானது. முதல் கட்டமாக நாப்பிரித்த பிரதேசத்தில் டிக்கட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் திஹாரிய யூத் விளையாட்டுக்கழகத்தின் வீரர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
திஹாரிய பொது விளையாட்டு மைதானம் மற்றும் கிடுகு விற்பனை தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள:
Tags
திஹாரிய செய்திகள்