சவுதி அரேபியாவில் கடந்த 2 ஆம் திகதி நடைபெற்ற சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் முதல் இடம் பெற்ற மாணவன் ரிப்தி முஹம்மத் ரிஸ்கான் இன்று காலை நாடுதிரும்பினார்.
நன்றி: மீள்பார்வை
இன்று காலை நாடுதிரும்பிய இவருக்கு ஜனாதிபதியின் வேண்டுகோலின் பெயரில் புத்தசாசன மற்றும் மதவிவகார பதில் அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன அவர்களில் தலைமையில் பாரிய வரவேற்பு நிகழ்வு வொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் முஸ்லிம் விவகாரங்களுக்கான இணைப்பாளர் கலாநிதி அஸ்ஸெய்யத் ஹஸன் மௌலானா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் றபீக் இஸ்மாயில், உதவிப்பணிப்பாளர் மௌலவி நூறுல் அமீன், மேல்மாகாண ஆளுநரின் பிரத்தியேகச் செயலாள் நக்கீப் மௌலானா, அமைச்சர் மேர்வின் சில்வா, மாணவனின் உஸ்தாதுகளான அல்ஹாபில் மௌலவி எம்.இஸட்.எம்.மஸ்ஊத், றிஸ்கானின் தந்தை முகமட் றிப்தி, தாயார் மிஸிரியா, சகோதரி பாத்திமா சமீலா உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
கொழும்பு ஆட்டுப்பட்டித் தெருவைப் பிறப்பிடமாகக் கொண்ட முஹம்மத் றிப்தி மிஸிரியா தம்பதிகளின் மூத்த புதல்வாரன ஹாபிஸ் முஹம்மத் ரிஸ்கான் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மதீனத்துல் இல்ம் அறபுக் கல்லூரியின் மாணவரான இவர் கடந்த 2012.08.09 ஆம் திகதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களதால் நடாத்தப்பட்ட ஆல்குர்ஆன் மனனப்போட்டியில் தெரிவு செய்யப்பட்டு சவூதி அறேபியாவின் மக்கா நகரில் கடந்த 2 ஆம் திகதி தொடக்கம் ஒருவாரகாலம் நடைபெற்ற போட்டியில் பங்குபற்றிய இலங்கை மாணவர்கள் நால்வரில் ஒருவரான றிஸ்கான் 15 வயதிற்குட்பட்டோருக்கான மேற்படிப்போட்டியில் 83 நாட்டு மாணவர்களுடன் போட்டியிட்டு சர்வதேச ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.




