பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து முச்சக்கரவண்டிக் கட்டணங்களையும் அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டிச் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி ஒரு கிலோமீற்றருக்கான கட்டணம் 3 ரூபாவிலிருந்து 5 ரூபாவரை அதிகரிக்கப்படவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.
முச்சக்கரவண்டிகளில் தற்போது ஒரு கிலோமீற்றருக்கு 35 ரூபா அறவிடப்படுகின்றது அக்கட்டணம் 38 ரூபா அல்லது 40 ரூபாவாக அறவிடப்படும்.
ஆரம்பக்கட்டணமான 50 ரூபாவில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படமாட்டாது என்றும் அச்சங்கத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை சனிக்கிழமை நள்ளிரவு முதல் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
