திஹாரியை சேர்ந்த பிரபல எழுத்தாளர் C.M.A. அமீன் அவர்களுக்கு "கலாபூஷணம் அரச விருது"


28 வது வருடமாக நடைபெற்று வரும்  கலாபூஷணம் அரச விருது வழங்கும் நிகழ்வு  15-12-2012 இன்று கொழும்பு ஜோன் டி சில்வா அரங்கில் கலாச்சார அமைச்சர்  டி.பி. க்கநாயக்க தலைமையில் நடைபெற்றது. 

 இன்றையா இந்த விருது வழங்கும் நிகழ்வில் திஹாரியை சேர்ந்த பிரபல எழுத்தாளர்  C.M.A. அமீன் அவர்களுக்கும்  "கலாபூஷணம்அரச விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

கிராமிய பிரதேச தேசிய கலைஞர்களை இனம் கண்டு  அவர்களுக்கு அரச விருது வருடா வருடம் கலாச்சார திணைக்களம், முஸ்லிம் சமய பண்பாட்டுத் திணைக்களம், ஹிந்து கலாச்சார திணைக்களமும் இணைந்து இவ் விருதினை கலைஞர்களுக்கு வருடா வருடம் வழங்கி வருகின்றது.  

சிங்கள கலைஞர்கள் 183 பேர், தமிழ் கலைஞர்கள் 60 பேர், முஸ்லிம்  கலைஞர்கள் 25 பேருக்குமாக மொத்தம் 268 பேருக்கு  அரச விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இக் கலைஞர்கள் யாவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் இவர்களுக்கு விருதும், சான்றிதழும்,  10 ஆயிரம் ரூபா  பணப்பரிசிலும் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் அமைச்சர்  டி.பி.க்கநாயக்க, பாராளுமன்ற் உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர், அமைச்சின் செயலாளர்  எம்.கே.பி திசாநாயக்க, கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் விஜித் ஹூனுகல, பணிப்பாளர்கள் சாந்தி நாவுக்கரசு, வை.எல்.எம் நவவி, புரவலர் ஹாசீம் உமர் ஆகியோரும் கலந்து கொண்டு விருதுகளை கலைஞர்களுக்கு வழங்கி வைத்தனர்

Post a Comment

Previous Post Next Post