ரிஸானா நபீக்கின் குடும்பத்திற்கு வழங்கும்பொருட்டு சவூதி அரேபிய
இளவரசியின் சட்ட ஆலோசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் ராஸிதினால்
தன்னிடம் கையளிக்கப்பட்ட பணத்தை திருப்பி அனுப்ப வேண்டிவரலாம் என
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
சவூதி அரேபியர்களால் வழங்கப்படும் எந்தவொரு உதவிகளையும் தாம் ஏற்றுக்
கொள்ளத்தயாரில்லை என ரிஸானா நபீக்கின் தாயார் பரீனா நபீக்
தெரிவித்ததையடுத்தே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.
சவூதி அரேபிய இளவரசியின் சட்ட ஆலோசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல்
ராஸித் கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது ரிஸானாவின்
குடும்பத்திற்கு வீடு ஒன்றை நிர்மாணித்துக் கொடுக்கும் நோக்கில் 10
இலட்சம் ரூபா நிதியினை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் கையிளத்திருந்தார்.
இந் நிதியினை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நேற்றைய தினம் மூதூருக்குச்
சென்று ரிஸானாவின் தாயாரிடம் கையளிக்கவிருந்ததாகவும் ஆனால் சவூதியின்
உதவிகளை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என ரிஸானாவின் தாயார்
தெரிவித்ததையடுத்து தனது விஜயத்தை ஒத்திவைத்ததாகவும் அவர் மேலும்
குறிப்பிட்டார்.