பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை அறிக்கை 106 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் நிறைவேற்றப்பட்டது.
அறிக்கைக்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 49 வாக்குகளும் கிடைத்தன. ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் அறிக்கைக்கு எதிராக வாக்களித்தன.
இதேவளை குற்றப் பிரேரணைக்கு எதிரான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெறும் வேளையில் அமைச்சர்களான டியூ குணசேகர, சந்திரசிறி கஜதீர மற்றும் திஸ்ஸ விதாரண ஆகியோர் அந்த வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை.
அத்துடன், ஆளுங்கட்சி எம்.பி.யான ரஜீவ விஜேசிங்க, எதிரணி உறுப்பினரான ஸ்ரீ ரங்கா ஆகியோர் வாக்களிக்கவில்லை. எனினும் லங்கா சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த வை.ஜி.பத்மசிறி, அரசாங்கத்துடன் இணைந்து பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்.
