பலஸ்தீனில் பன்றிக் காய்ச்சல் - 14 பேர் உயிரிழப்பு.


"H1N1 எனப்படும் பன்றிக் காய்ச்சலால் இதுவரை 14 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்" என  பலஸ்தீன் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (08/01/2013) வெளியிடப்பட்டுள்ள அமைச்சக அறிக்கையில், "பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகக் கூறப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை. இதுவரை குறித்த காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆகும். பலஸ்தீனின் அனைத்துப் பிரதேசங்களிலும் இக்காய்ச்சல் தொற்றியுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. அதில் 7 பேர் காஸாவைச் சேர்ந்தவர்கள்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படைச் சுகாதாரப் பணிகளுக்கான பணிப்பாளர் நாயகம் அஸாத் அல் ரம்லாவி குறிப்பிடுகையில், "பன்றி காய்ச்சல் தொற்றுக்கு ஆளான சுமார் 25,000 பேருக்கு நோய்த்தடுப்பு மருந்துகள் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன"  என்று குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post