நிதி மோசடியில் - 14 பேர் கைது

 இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் பெயரில் போலி கடனட்டைகளை உபயோகித்து நிதி மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினர் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள், 263 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட காவற்துறை அதிகாரி பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நிதி மோசடி தொடர்பில் மேலும் பல சந்தேகத்துக்குரியவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

Previous Post Next Post