சவூதி அரேபியாவின் 16 சிறைகளில் 440 இலங்கையர்களுக்கு தண்டனை

சவுதி அரேபியாவில் 440 இலங்கையர்கள் சிறைத்தண்டனையை அனுபவித்து வருவதாக இலங்கைக்கான அந்நாட்டின் தூதுவராலயம் தெரிவித்துள்ளது.
இவர்கள் சவுதி அரேபியாவிலுள்ள 16 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அலுவலகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
சவுதி அரேபியாவின் மஸாஸ் சிறைச்சாலையில் மாத்திரம் 101  இலங்கையர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொலை, கொள்ளை மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம் போன்ற குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் சவுதி அரேபியாவில் சிறை வைக்கப்பட்டுள்ளவர்களில் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட எவரும் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்

Post a Comment

Previous Post Next Post